தொழிலாளி மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி பிரதான சாலையில் வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் மாரிமுத்து, ஜெய பாண்டி ஆகிய இரண்டு கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் குவியல் சரிந்து மாரிமுத்து மீது விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டி மாரிமுத்துவை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து ஜெயபாண்டி அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் சென்றவர்களின் உதவியுடன் மாரிமுத்துவை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.