Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாப பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாபநாசம் அருகில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள டானா அனவன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருமலைசாமி(50). இவருக்கு பூமாரி என்ற மனைவியும், வசந்தகுமார், முத்துக்குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகனான அஜித்குமார் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். திருமலைச்சாமி கட்டிடங்களை இடிக்கும் பணிகளில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 19ம் தேதி அன்று பாபநாசம் அருகிலுள்ள காரையாறு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிக்காக சென்றுள்ளார். இவருடன் 5 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.அப்போது டிரில்லர் இயந்திரத்தை வைத்து கட்டிடத்தை இடித்து கொண்டிருக்கும் போது திடீரென்று எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து திருமலைசாமியின் மீது விழுந்தது.

இதனால் திருமலைசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் திருமலைசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |