Categories
தேசிய செய்திகள்

கட்டாய மத மாற்றத்திற்கான சட்டம்… விரைவில் கொண்டுவரப்படும்… மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ” பல மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு எந்த மத மாற்றத்தையும், தூண்டுதல் மூலமாகவோ அல்லது கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அது சட்டவிரோதமானது என்று தெரிவித்தார்.

பல இடங்களில் பலவந்தமாக மதமாற்றத்திற்கு உட்படுத்த படுவது அதிகரித்து வருவதால் இதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவதற்கு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் உத்திரப் பிரதேசம், ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க ஏற்கனவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பாஜக அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |