Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயமா இத போடுங்க…. வேகமாக பெருக்கெடுக்கும் 2 ஆவது அலை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களை தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முக கவசத்தை அணிதல் போன்ற விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கு வலியுறுத்தியது.

இதற்கிடையே இதனை கடைபிடிக்காத நபர்களுக்கு அரசாங்கம் அபராதம் விதித்து வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தாசில்தார் காமாட்சியின் தலைமையிலான அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரோனா குறித்த விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களிடமிருந்து மொத்தமாக 3,700 ரூபாயை வசூலித்ததுள்ளனர்.

Categories

Tech |