Categories
மாநில செய்திகள்

கட்டாயப்படுத்தக் கூடாது….! ரேசன் கடைகளுக்கு ஊழியர்களுக்கு….. அமைச்சர் எச்சரிக்கை…..!!!!

ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வரும் மக்களை சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கி கொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவான முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக மக்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அவ்வபோது அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கீழே விழுந்த பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது, மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என்று பல உத்தரவுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ரேஷன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேஷன் கடை ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இது குறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

Categories

Tech |