தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் வரும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்பட 14 இடங்களில் தங்கும் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கட்டணம் இல்லாமல் இப்பகுதிகளில் தங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பாத யாத்திரையாக பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.