Categories
சினிமா தமிழ் சினிமா

கட்சி அலுவலகத்திற்கு வருவாரா விஜயகாந்த்…? ஆர்வமுடன் இருந்த தொண்டர்கள்….!!!!!!!!

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றார். இவரின் பிறந்த நாளில் ரசிகர்கள் கட்சித் தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றார்கள். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வருவாரா அவரைப் பார்க்க முடியுமா என தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்கள் முன் உற்சாகமாக கைகளை அசைத்தது மட்டுமல்லாமல் வெற்றியை குறிக்கும் விதமாக பெரு விரலையும் வளைத்து காட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர் கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமச்சந்திரன் போன்றோர் இருந்துள்ளனர்

Categories

Tech |