தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிக்கு ஜனவரி 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் 13 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூகவிரோதிகளே காரணம் என்று கூறியிருந் தார்.
இவரின் பேச்சு பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பை யும் ஏற்படுத்தியது.இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினி ஜனவரி மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.