விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு எடுத்துள்ளார். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 100 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 100 மாவட்டச் செயலாளர்களில் 20 சதவீதம் பெண்களும், 25% இளைஞர்களுக்கும், 10% பட்டியல் இனத்தைச் சேராதவர்களுக்கும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலையும் பெற்று விட்டார் திருமாவளவன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Categories
கட்சியில் அதிரடி மாற்றம்…. திருமாவளவனின் புது ப்ளான்…. வெளியான தகவல்….!!!!
