நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கார்கி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொண்டு நடிக்கும் அவரிடம், சிலர் கவர்ச்சியாக, காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர், “என்னால் அப்படியெல்லாம் நடிக்க முடியாது. சினிமா இல்லை என்றால் டாக்டர் வேலை இருக்கு. அது இல்லை என்றால் கடை வைத்து சம்பாதிப்பேன். விருப்பமில்லாத கேரக்டரில் நடிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டாராம்.