குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக கூடியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின் சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அவரின் வருகையை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக கூட்டமாக கூடியுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.