Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையை சேதப்படுத்திய யானை…. மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. இந்த யானை செல்வராஜ் என்பவரது கடையை சேதப்படுத்தியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜ் எழுந்து சத்தம் போட்டதால் யானை அங்கிருந்து சென்றது.

மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை காட்டுயானை மிதித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்த காட்டு யானைகள் விளைநிலங்களை அடிக்கடி சேதப்படுத்துவதால் விவசாயிகள் மிகவும் நஷ்டத்தில் உள்ளனர். எனவே யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |