Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடையை அகற்ற முடியாது” பெண் அதிகாரியை தள்ளிவிட்ட வியாபாரி…. போலீசாரின் நடவடிக்கை…!!

பெண் அதிகாரியை கீழே தள்ளிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் துரை என்பவர் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டை சேர்ந்த அங்காடி குழு கருவேப்பிலை வியாபாரம் செய்வதற்காக ஏ ரோட்டில் தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர். ஆனால் துரை  சாலையோரத்தில் இருந்து வியாபாரம் செய்துள்ளார். இதுகுறித்து மற்ற வியாபாரிகள் அங்காடி நிர்வாகக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் துரை அதற்கு மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபமடைந்த துரை பெண் அதிகாரி கல்பனாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |