செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரில் விஜயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாஜி நகரில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ரூபா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் கடையிலிருந்து ரூபாவை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துள்ளனர்.
மேலும் கடையில் இருந்த 5 லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டுகளை எடுத்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரூபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சக்திவேல், காளிதாஸ், சுதாகர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.