Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி வரை நிறைவேறாத நடிகர் விவேக்கின் ஆசைகள்.. நெஞ்சை உருக வைத்த தகவல்..!!

தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் நீந்த செய்த நகைச்சுவை கலைஞர் விவேக்கின் சில ஆசைகள் இறுதி வரை நிறைவேறாமல் போனது. 

நடிகர் விவேக் நாடக கலைஞராக தன் பயணத்தை தொடங்கி 25 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய நகைச்சுவை திறமையால் தமிழ் மக்களை கட்டிப்போட்டவர். இவர் தன் திரைப்படங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த மூடப்பழக்கங்களை ஒழிக்க பல்வேறு கருத்துக்களை தவறாமல் கூறி வருபவர்.

அப்படிப்பட்ட மிகச்சிறந்த மனிதரான நடிகர் விவேக்கிற்கு, சில ஆசைகள் இருந்துள்ளது. அதாவது விவேக் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். அந்தவகையில் சினிமா துறைக்கு வந்ததிலிருந்து உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்ற ஆசை விவேக்கிற்கு இருந்துள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின்  படப்பிடிப்பு துவங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விவேக் தன் இணையதள பக்கத்தில், “உலகநாயகனுடன் நடிக்க வேண்டும் என்பது எனது பல நாள் கனவு, இந்தியன்-2 திரைப்படம் மூலம் தற்போது அந்த கனவு நனவாகப் போகிறது, அவருடைய படத்தில் நானும் நடிக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது திடீர் இழப்பு ரசிகர்கள் மட்டுமன்றி கமலஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திரைப்படங்களை இயக்க வேண்டும் என்றும் விவேக் திட்டமிட்டருந்துள்ளார். கடைசியாக தன் வாழ்நாளில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு விட வேண்டும் என்ற உயரிய இலக்கை கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அதன்படி தற்போது வரை அவர் சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். இதனால் அவரின் 3 ஆசைகள்  நிறைவேறாமலேயே போய்விட்டது.

Categories

Tech |