15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் நேற்று மோதிக் கொண்டன. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ராகுல் திவாட்டியா சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற இப் போட்டியில் கடைசி பந்துகளில் குஜராத் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது களத்தில் இருந்த ராகுல் திவாட்டியா 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார். இந்த வெற்றி மூலம் குஜராத் அணியின் புள்ளியியல் பட்டியில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையடுத்து பஞ்சாபுக்கு எதிரான போட்டியின் போது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தது எப்படி என குஜராத் வீரர் ராகுல் திவாட்டியா கூறியுள்ளார். அதில், கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என நானும் மில்லரும் பேசிக்கொண்டிருந்தோம். அதன்படி ஓடின் ஸ்மித் ஓவர் வீசினால் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். அவர் பந்தை ஸ்டம்புக்கு வெளியே வீசுவார் என்று உணர்ந்தேன். அதேபோன்று ஸ்டம்புக்கு வெளியே வீசியதால் எனக்கு சிக்ஸர் அடிக்க எளிதாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.