Categories
தேசிய செய்திகள்

கடைசி தேதி அறிவிப்பு, மீறினால் பணம் கிடைக்காது…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். கொரோனா பிரச்சனை காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலவரம்பு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் அதனை சமர்ப்பிக்காமல் இருந்தால் அந்த வேலையை உடனடியாக முடிப்பது நல்லது. இல்லையென்றால் பென்சன் தொகை வந்து சேராது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், யூசியோ பேங்க் போன்ற வங்கிகளில் இந்த வசதியை பென்சனர்கள் பெறலாம். doorstepbanks.com அல்லது www.dsb.imfast.co.in/doorstep/login என்ற முகவரியில் சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது Doorstep Banking மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம்.

மேலும் 18001213721 மற்றும் 18001037188 ஆகிய டோல் ஃபிரீ எண்களும் உதவும்.பென்ஷன் வாங்குபவர்கள் தபால் நிலையங்கள் மூலமாக அல்லது வங்கி கணக்குகள் மூலமாக வீட்டிற்க்கே வந்து ஆய்வு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |