Categories
தேசிய செய்திகள்

கடைக்கு சென்ற தாய்….. 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. 60 வயது முதியவர் கைது…!!

12 வயது சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் இருக்கும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு 60 வயதான புனிராம் தாஸ் என முதியவர் அவ்வப்போது வந்து செல்வார். அவ்வாறு வரும்போது சிறுமியை நோட்டம் விட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று சிறுமியின் தாய்க்கு கடைக்கு சென்றுவிட முதியவர் இதனை கவனித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷங்கள் செய்துள்ளார். சிறுமி சத்தமிட முயற்சித்ததால் அவரது வாயை பொத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கடைக்கு சென்ற தாய் வீட்டிற்கு வந்தபோது மகளின் நிலையை கண்டு விசாரித்துள்ளார். அப்போது சிறுமி புனிராம் தாஸ் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் புனிராம் தாஸ் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |