பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குஞ்சாவிளை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏசுதாஸ் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.
அதன்பின் கடையிலிருந்து திரும்பி வந்த ஏசுதாஸ் மனைவி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தக்கலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஸ்ரீஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.