புதுச்சேரியில் பல்வேறு நிபதனைகளுடன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.இது பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.இந்த நடைமுறை 3 ஆ்ண்டுகள் அமலில் இருக்கும். இந்த அனுமதியானது புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன் விதிகளை சமரசம் செய்யாமல் தரப்படுகிறது.