Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைகளை அமைக்க கோரிக்கை…. வியாபாரிகளுடன் இணைந்த கட்சியினர்…. பேரூராட்சி அலுவலகம் முற்றுகை….!!

சாலையோர கடைகளை அமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கவுமாரியம்மன் கோவில் அருகே மற்றும் நெடுஞ்சாலை அருகே சாலைகளை ஆக்கிரமித்து 37 சாலையோர கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர். தற்போது கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால் மீண்டும் கடைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் வியாபாரிகளுடன் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நயினார், மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பால்சுதிர் ஆகியோர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Categories

Tech |