தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சமீப காலங்களாக மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மட்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 26,242 கடைகள் மட்டும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகிறது. மேலும் மீதமுள்ள கடைகளும் இதுபோன்று தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
Categories
“கடைகளில் 2 வகை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்”…? மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!!
