Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. காலாவதியான குளிர்பானங்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டங்களை  பின்பற்றி உணவு தயாரிப்பு நிலையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வி.எம் சத்திரத்தில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஒரு  நிறுவனத்தில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் தலைமையில் ஒரு குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த சோதனையின்போது குளிர்பானம் அடைத்து வைக்கப்பட்டிருந்த 576 பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்துள்ளது.  மேலும்  புகழ்பெற்ற குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர்களை போலியாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த குளிர்பான பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. இதேபோன்று காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்த 76 குளிர்பான பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |