இந்தியா பொருளாதார நெருக்கடியால் திணறி வரும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை, சமையல் எரிவாயுவை இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பொதுத்துறை எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிஇஓ திஷேரா ஜெயஷிங் கடிதம் எழுதியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், எரிவாயு தொழிலில் மிகப் பெரிய மோசடிகள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தையும் வழங்கியுள்ளார்.