Categories
மாநில செய்திகள்

கடுமையான வெயில்…. அவதிப்படும் பொதுமக்கள்…. இத ஃபாலோ பண்ணுங்க…. மருத்துவர்கள் அறிவுரை….!!

சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கடுமையான வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

  • அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் இதன்மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
  • விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சுத்தமான நீர் கிடைப்பதற்கான வழி முறைகளை செய்து கொடுக்க வேண்டும்.
  • மோட்டார் சைக்கிளில் உணவு சேவைகள், பார்சல் சேவைகள் செய்யும் தொழிலாளர்களின் நலன்களில் நிறுவனங்கள் அக்கறை காட்ட வேண்டும்.
  • பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை‌ சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
  • நர்சரி செல்லும் குழந்தைகளை சூரிய ஒளி வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
  • மாணவர்கள் மீது பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
  • வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வெண்ணிற பருத்தி ஆடையை அணிய வேண்டும்.
  • மேலும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தங்கள் மேல் சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |