Categories
Uncategorized

கடுமையான விதியை தவிர்க்க மக்கள் செய்யும் செயல் … உருவான புதிய சிக்கல்… நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!

பிரிட்டனில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதால்  தற்போது மக்கள் பலர் பிரிட்டன் நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகில் கொரோனா ஆபத்து நிறைந்த 33 பகுதிகளில் இருந்து பிரிட்டனிற்கு வரும் பயணிகள் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயப்படுத்த தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக பயணிகளிடம் 1,750 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறையானது வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனவே பிற நாடுகளில் இருக்கும் பயணிகள் பலரும் தற்போது பிரிட்டனுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான மக்கள் அரசு அறிவித்திருக்கும் சிவப்பு பட்டியலில் இருக்கும் அந்த 33 நாடுகளிலிலிருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அதிக கட்டணம் மற்றும் பத்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் ஒரு நாளுக்கு முன்பாகவே பலரும் பிரிட்டனிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே இது புதிய பிரச்சனையை உருவாக்கிவுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் ஓட்டலில் தனிமைபடுத்தப்படுவது கொரோனா பரவுவதற்கு காரணமாக கூட அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவுவதற்கு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |