ரஷ்யா-உக்ரைன் மீது போரை தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் ரஷ்யா போர் தொடங்கிய நாளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க தொடங்கியதால், பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதோடு உக்ரைனில் இருந்தும் தானிய ஏற்றுமதிகள் போன்றவைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்று அழைக்கப்படும் ஜெர்மனியில் போர் தொடங்கியதில் இருந்து பொருளாதார சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெர்மனியின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக ஜெர்மனி பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடுமையான சிக்கல்கள் மற்றும் போரைத் தாண்டியும் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனி சாதித்து காட்டியுள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.