டெக்சாஸில் பெய்த பனிப்பொழிவு செயற்கையானது என்று மக்கள் சதி கோட்பாடு என்னும் தலைப்பில் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான பனி பெய்துள்ளது. இந்த பனிப்பொழிவின் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அத்தியாவசிய தேவையான தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் தவித்து வந்துள்ளனர். மேலும் பனிபொழிவினால் 20 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு குறைந்து வருவதால் தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
இதனையடுத்து பனிப்பொழிவை மையமாகக்கொண்டு சமூக வலைத்தளங்களில் “சதிக்கோட்பாடு” என்னும் தலைப்பில் பல்வேறு மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த பனிப்பொழிவானது இயற்கையானது அல்ல செயற்கையானது. இது மாகாணத்தை அழிவுக்கு கொண்டு செல்லும் என்று சிலரும், அதற்கு விளக்கம் தெரிவித்து மற்ற சிலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
I am obsessed with idiots in Texas thinking the snow is fake and a government plot pic.twitter.com/7F0hsLB3hB
— B.W. Carlin (@BaileyCarlin) February 22, 2021
I weep for the education system in the state of Texas. pic.twitter.com/lq45woWGrx
— chris evans (@notcapnamerica) February 21, 2021