எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
சிரியா நாட்டில் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டினுடைய எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இது தன்னாட்சி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அங்கு கச்சா எண்ணெய் நிரப்புவதற்கு கடைசியாக செப்டம்பர் 14ஆம் தேதி கப்பல் ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக போருக்கும் முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 இலட்சம் பீப்பாயாக இருந்த நிலையில் போருக்குப்பின் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது. இந்த தகவலை சிரிய எண்ணெய் மற்றும் கனிமவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா தங்களுடைய நாட்டில் உள்ள சில என்ன கிணறுகளுக்கான கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அங்கு எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையினால் அங்குள்ள மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு குறைந்த ஊதியம் என்பதால் எரிபொருள் வாங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.