பிரபல சீரியல் நடிகர் தன்னுடைய காதல் மனைவிக்காக புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துக் கொடுக்க இருக்கிறாராம்.
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் முனீஸ் ராஜா. இவர் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுருந்தார். அதில் என்னுடைய மகளை ஒரு சீரியல் நடிகர் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தவறான தகவல் தன்னுடைய பார்வைக்கு வந்ததாகவும், எனக்கு திப்பு சுல்தான் நைனார் முகமது என்ற ஒரே ஒரு மகனை தவிர வேறு பிள்ளைகள் கிடையாது எனவும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை தத்தெடுத்து நான் வளர்த்து வந்தேன்.
அவளுடைய மனம் புண்படக் கூடாது என்பதற்காக நான் யாரிடமும் தத்துமகள் என்று சொல்லாமல் சொந்த மகள் என்றே கூறினேன். அவளை அந்த சீரியல் நடிகர் ஏதோ செய்து தன்வசப்படுத்தி உள்ளார். அவர் மிக மட்டமான புத்தி கொண்டவர். பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமானவர். எனக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகர் முனிஷ் ராஜா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய ரிசப்ஷனுக்கு அனைவரும் வர வேண்டும் என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன்.
அதற்கு முன்பாக என்னுடைய காதல் மனைவிக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன். அதாவது என்னுடைய மனைவி ஆசைப்பட்டபடி அவருக்கு சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கி கொடுக்க இருக்கிறேன். அதோடு என்னுடைய சொந்த ஊரில் 50 லட்சம் ரூபாய் செலவு செய்து என்னுடைய மனைவிக்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டின் வேலை இன்னும் 2 மாதங்களில் முடிவடைந்து விடும். அதன் பிறகு என்னுடைய உறவினர்களை எல்லாம் அழைத்து அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் பால் காய்ச்சும் விழாவை நடத்த இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் முனிஷ் ராஜா மீது ராஜ்கிரண் பல்வேறு குற்ற சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், தற்போது தன்னுடைய மனைவிக்காக அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.