Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடின உழைப்பு.! சாதாரண விஷயம் இல்ல…. “அதனால தான் சூர்யா நம்பர் 1 பேட்டர்”….. புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கும் போது ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது.. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது.

இதில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியது.. இந்நிலையில் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி நேற்று மெல்போர்ன் ஸ்டேடியத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது..

இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் (61) கே.எல். ராகுல் (51) மற்றும் விராட் கோலி (26) ரன்கள் சேர்த்தனர், பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது..

இதில் சூர்யா 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61* ரன்களை 244.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார்.  இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யா.. இந்த ஆண்டு 28 இன்னிங்ஸ்களில் சூர்யகுமார் 44.60 சராசரியில் 1,026 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் அடங்கும்.. சிறந்த ஸ்கோர் 117. இந்த ரன்கள் 186.24 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தன.. இப்படி இந்திய அணியின் மிடில் வரிசையில் மிகப்பெரிய பலமாக இருக்கும் சூர்யகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்..  போட்டிக்கு பின் சூர்யகுமாரின் அசத்தலான ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் டிராவிட் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இந்நிலையில் வெற்றிக்கும் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ஆமாம், இது நம்பமுடியாதது. அதனால்தான் அவர் (சூர்யா) இந்த நேரத்தில் உலகின் நம்பர் 1 டி20 வீரராக இருக்கிறார், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோரை அடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, அவர் விளையாடும் விதம் அற்புதம். அவர் தனது செயல்முறைகளில் மிகவும் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.. அவர் தனது திட்டங்களில்  மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. சூர்யாவைப் பற்றிய விஷயங்களில் ஒன்று, அவருடைய ஆட்டம், உடற்தகுதி பற்றி யோசிப்பதில் அவர் உழைத்த கடின உழைப்பு மட்டுமே என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு சூர்யாவைப் பார்த்தால், அவர் தனது உடலை எப்படிக் கவனித்துக்கொள்கிறார், அவர் எவ்வளவு நேரம் உடற்பயிற்சிக்காக செலவிடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர் உழைத்த பலனைப் பெறுகிறார் என்று நினைக்கிறேன்.. நீண்ட காலம் இது தொடர வேண்டும். அவர் எங்களுக்கு முற்றிலும் தனித்துவமானவர் என்று நான் நினைக்கிறேன். அவரை பார்ப்பதற்கே ஒரு மகிழ்ச்சி.. அவர் அந்த மாதிரி ஃபார்மில் இருக்கும்போது அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. ஒவ்வொரு முறையும் அவரது பேட்டிங்கை பார்க்கும் போது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது “என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அடிலெய்டு ஆடுகளத்தைப் பொறுத்து இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அணி மாற்றங்களைச் செய்யலாம் என்றும், ஆனால் அணியின் மனநிலை சீராக இருக்கும் என்று கூறினார்.. நவம்பர் 10ஆம் தேதி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |