Categories
சினிமா தமிழ் சினிமா

“கடவுள் இருக்காரு”…. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு…. எதற்கு தெரியுமா?….!!!!

வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் மன்மதலீலை படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் படம் மன்மதலீலை. இது வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பற்றிய படம் என்றும், பாக்கியராஜின் சின்ன வீடு திரைப்படம் மாதிரி இருக்கும் என்றும் இந்த கதை குறித்து வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படத்தை பார்ப்பதற்கு காலையிலேயே ரசிகர்கள் கூடி இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு மன்மத லீலை படம் வெளியானது. அத்துடன் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாக வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |