Categories
தேசிய செய்திகள்

“கடவுள் இருக்கான் குமாரு”…. நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…. வைரல்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூர் சாலையில் யூ-டர்ன் அடித்த பேருந்தின் மீது மோதுவதிலிருந்து நூலிழையில் தப்பித்த ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. வளைவான சாலையில் அதிவேகத்தில் ஸ்கூட்டியில் வந்த அந்த இளைஞர், பேருந்துக்கும் சுற்று சுவருக்கும் இடையில் நுழைந்து பிறகு அருகே உள்ள பெட்டி கடை ஒன்றுக்கு மரத்துக்கும் இடையே நுழைந்து உயிர் தப்பினார். இதில் அவரது ஹெல்மெட் கீழே விழுந்த நிலையில் ஸ்கூட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றார். மனதை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |