Categories
சினிமா

கடவுளே…! சிம்புவுக்கு கல்யாணம் நடக்கணும்… ட்ரெண்டிங் ஆன ரசிகர்களின் செயல்….!!

சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் மண்டியிட்டு வேண்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் திரையுலகில் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் ஆகாமல் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கின்றனர். அவர்களில் சிம்புவும் ஒருவர். இவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று திரையுலகத்தினர் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் சிம்பு தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

இந்நிலையில் வேலூரை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் சிலர்  வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிம்புவின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு ரத்தினகிரி முருகன் கோவிலில் மண்டியிட்டு படியேறிச் சென்று சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து முருகனை தரிசித்து உள்ளனர்.

Categories

Tech |