உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரவேண்டும் என போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
உக்ரேன ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் உக்ரேனில் அமைதி நிலவுவதற்காகவும் சிறப்புப் பிரார்த்தனையை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து இந்த பிரார்த்தனையில் ஏராளமான பிஷப்கள், பாதிரியார்கள், மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போப் உக்கிரன் மீது ரஷ்யா எடுத்துள்ள போரை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.