நடிகர் விஜயின் பீஸ்ட் படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இம்மாதம் 13ஆம் தேதி அன்று இந்த படம் வெளியாக உள்ளது.
அந்த வகையில் விஜய் படம் ரிலீஸ் என்றால் அதற்கு முன்னதாகவே ஆடியோ லான்ச் செய்து பட்டையைக் கிளப்புவார்கள். அந்த ஆடியோவில் விஜய் பேச வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் எல்லாம் பேசி தீர்ப்பார். இந்நிலையில் 3 பாடல்கள் மட்டுமே இந்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ளதால், இந்தமுறை ஆடியோ லான்ச் விழாவானது தனியாக நடத்தப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதனை அடுத்து விஜய்யின் நேர்காணலுக்கு படக்குழு ஏற்பாடு செய்தது. இந்த நேர்காணலானது சன் டிவியில் நேற்று இரவு ஒளிபரப்பானது. அப்போது படத்தின் இயக்குனர் நெல்சன், விஜயை நேர்காணல் செய்தபோது, விஜய் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது விஜயின் அப்பா எஸ்ஏசி குறித்து நெல்சன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விஜய், கடவுளுக்கு அடுத்தபடியாக எனக்கு என் அப்பாதான் என்றும் அவர்தான் எங்கள் வீட்டின் ஆணிவேர்.
மேலும் ஒரு தந்தையின் அருமை நாம் மகனாக இருக்கும் போது நமக்கு தெரியாது எனவும் தந்தையாக இருக்கும் போது தான் அதன் அருமை புரியும் என உருக்கமாக பேசியுள்ளார். இதையடுத்து விஜய்க்கும், அவரது அப்பாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என செய்திகள் வெளியான நிலையில், நடிகர் விஜய் அவரது அப்பா குறித்து உருக்கமாகப் பேசி இருப்பது பல்வேறு வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது.