Categories
பல்சுவை

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது தெரியுமா?…. இதோ உங்கள் கேள்விக்கான பதில்….!!!!

கடல் நீர் மட்டும் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்று நீங்கள் அனைவரும் சிந்தித்திருப்பீர்கள்? இதோ அதற்கான பதிலை பார்க்கலாம். கடல்நீர் உப்பாக இருக்க காரணம் என்னவென்றால்,நிலத்தில் விழும் மழை நீரில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் சிறிதளவு கலக்கின்றது. அதனால் மழைநீர், சிறிதளவு கார்பானிக் அமில தன்மையை அடைகின்றது. சிறிதளவு அமிலத்தன்மை உடைய மழைநீர் பாறைகளின் மீது கடந்து வரும்போது பாறைகளை அழிக்கின்றது.

இந்த நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்கள் உருவாகின்றன. இது அயனிகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அயனிகள் மழை வெள்ளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இறுதியில் கடலில் கலக்கிறது. இதில் ஒரு பகுதியை கடலில் உள்ள உயிரினங்கள் பயன்படுத்திக் கொண்டாலும் பெரும்பான்மையான பகுதி கடலில் தங்கி விடுகிறது.

இந்தஅயனிகளில்  90 சதவீதம் சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவை உள்ளது. அவை உப்புத் தன்மை உடையது. பல கோடி வருடங்களாக ஆறுகளில் இருந்து கடலுக்கு அடித்து வரப்படும் அயனிகள் கடலில் தங்கி விடுவதால் கடல் நீர் உப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடல் நீர் ஆவியாகும் போது கடலில் உள்ள உப்பு வெளியேறாமல் அப்படியே தங்கி விடுகின்றது. இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது என்று.

Categories

Tech |