பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிராவை சேர்ந்த 4 வயது சிறுவன் நினா கோமெஸ். தனது தந்தையுடன் ரியோவில் உள்ள குவானாபரா விரிகுடா கடலுக்கு சென்ற போது அங்கு இருந்த நெகிழி குப்பைகளை கண்ட சிறுவன், இதுகுறித்து தனது தந்தையிடம் கேட்க, அவர் நெகிழி குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதை தெரிவித்தார். இதனை அறிந்த சிறுவன் அவற்றை அப்புறப்படுத்த எண்ணி செயலில் இறங்கியுள்ளார்.
தனது தந்தையின் உதவியுடன் கடலில் உள்ள நெகிழி குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி வருகிறான். அந்த சிறுவனின் செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இது குறித்து பேசிய சிறுவன், கடலிலுள்ள குப்பைகளால் ஆமைகளும் மீன்களும் உயிரிழக்கின்றன என தனது மழலை மொழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.