கடல்சார் பல்கலைக் கழகத்திற்கான நுழைவுத்தேர்வு மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை அருகில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வு மே 29 ம் தேதி கணினி வழியாக நடத்தப்படும். மேலும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி மே 16ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த நிலையில் மே 19ஆம் தேதி மாதிரி தேர்வு நடத்தப்பட்டு ஹால்டிக்கெட் வழங்கப்படும். மே 20 தேர்வுகள் நடைபெறும். மேலும் ஜூன் 3 தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.. இதனையடுத்து ஆன்லைன் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 16-ஆம் தேதி முதல் முதல் கட்ட மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.