Categories
வானிலை

கடலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை… கீழ் செருவாயில் 9.4 சென்டிமீட்டர் பதிவு….!!!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது அதன் பின் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் இடையிடையே பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து பகல் முழுவதும் மழை பெய்யாமல் இருந்த சூழலில் நேற்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் பெயர் தொடங்கியது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி இருக்கிறது. மேலும் மாநகரில் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. இதே போல சிதம்பரம் விருதாச்சலம், தொழுதூர், பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் செருவாயில் 9.4 சென்டிமீட்டரும் குறைந்தபட்சமாக வேப்பூரில் 0.3 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

Categories

Tech |