Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள்”…. மீட்ட ராமேஸ்வர மீனவர்கள்….!!!!!

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்களை ராமேஸ்வர மீனவர்கள் மீட்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று மீனவர்கள் சென்ற 14ஆம் தேதி இலங்கையில் உள்ள மன்னார் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் மீண்டும் கரை திரும்ப வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். இதில் எட்டு பேர் கொண்ட மீனவர்கள் கசத்தீவு அருகே நடுகடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது தூரத்தில் படகு ஒன்று கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதில் இரண்டு மீனவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர்கள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு இலங்கை மீனவர்களையும் படகில் இறந்த நிலையில் கிடந்த இரண்டு மீனவர்களின் உடல்களையும் மீட்டார்கள். பின் அவர்களை கச்சத்தீவு பகுதியில் இறக்கிவிட்டார்கள். பிறகு இலங்கை மீனவர்கள் இருவருக்கும் உணவு, குடிதண்ணீர் கொடுத்து ராமேஸ்வர மீனவர்கள் உதவி செய்தார்கள். இதையடுத்து இலங்கை கடற்படை வந்த பின்னர் ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரும் படகுடன் நேற்று காலை ராமேஸ்வர கரைக்கு திரும்பினார்கள். மேலும் தங்களின் உயிரை காப்பாற்றிய ராமேஸ்வர மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் இரண்டு பேரும் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்தார்கள்.

Categories

Tech |