கர்நாடக மாநிலத்தில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்துள்ளார். இதுபற்றி அறிந்த அவ்விரு பெண்களில் ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அந்த காதலன் பாறையில் தலை மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சோமேஸ்வர் கடற்கரையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது
கர்நாடகாவைச் சேர்ந்த லொயிட் டிசோசா என்ற 28 வயது இளைஞர் தான் காதலிக்கும் அந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து சுமுகமாக பிரச்சினையை பேசி முடித்துவிடலாம் என பேசிக் கொண்டிருந்தபோது அந்த இளம்பெண் இந்த விபரீத எடுத்துள்ளார். அவரை காப்பாற்ற அந்த இளைஞன் கடலில் குதித்த போது பாறை மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.