கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய ராமநாதபுரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 350 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குனர் பலராமன் கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த மையத்திற்காக 75 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. இங்குள்ள கடலில் 8 மெகா வாட் திறனில் இரண்டு காற்றாலைகளை நிறுவி பரிசோதிக்கப்பட உள்ளது. மேலும் குஜராத் மற்றும் தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பதற்காக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
Categories
கடலில் காற்றாலை மின் நிலையம்…. 75 ஏக்கர் நிலம்…. எங்கு தெரியுமா?….!!!!
