கடலில் இருந்து கரை ஒதுங்கிய 3 1/2 அடி அம்மன் சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் பகுதியில் சன்னதி என்ற கடல் அமைந்துள்ளது. இங்கு நேற்று பலத்த காற்று வீசியதால் கடல் உள்வாங்கியது. அப்போது கடலில் காணப்பட்ட சேற்றில் சுமார் 3 1/2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறையினர் சிலையை கைப்பற்றினர். மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேதாரண்யம் பகுதியில் அமைந்துள்ள கோவிலின் குடமுழுக்கின் போது பழைய சிலையை கடலில் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு கடலில் விட்ட சிலை தற்போது கரை ஒதுங்கியது தெரியவந்துள்ளது.