வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் கோடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர், வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவர்.
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அலைகளை கண்டு ரசித்தபடி கடலில் குளித்து மகிழ்ந்தனர்.