Categories
உலக செய்திகள்

கடற்கரையில் குதூகலித்த மக்கள்.. திடீரென்று வந்து கடலுக்குள் விழுந்த விமானம்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் கடற்கரையில் திடீரென்று விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான  வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் கடற்கரையில் ஒரு விமானம் வேகமாக தரையிறங்க முயற்சித்து கடலுக்குள் விழுந்துள்ளது. அப்போது அதிகமான மக்கள் கடற்கரையிலும் கடலிலும் இருந்துள்ளனர். எனினும் நல்லவேளையாக ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த சனிக்கிழமை அன்று பேட்ரிக் விமானப்படை தளத்திற்கு அருகில் coca கடற்கரை விமான கண்காட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. எனினும் விமானி உட்பட எவருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் தொடர்பாக, Cocoa Beach Air Show அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, The TBM Avenger விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக விமானி கரைக்கு அருகே கொண்டு செல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் சம்பவத்தை தொடர்ந்து மீட்புபடையினர் உடனடியாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |