Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடமைய செய்ய போறவருக்கு இப்படியா ஆகணும்…. டாக்டருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் லோடு ஆட்டோ மோதி மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மனோன்மணி என்பவர் வசித்து வந்தார். இவர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ மனோன்மணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மனோன்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |