Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்க நினைக்கீறீங்களா….? OCT-10 வரை வெயிட் பண்ணுங்க….. IOBI அசத்தல் அறிவிப்பு….!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது. 

இந்தியாவில் வசிக்கக்கூடிய மக்களில் பெரும்பகுதி மக்கள் தங்களுக்கு பிடித்தமான வீடு, கார் உள்ளிட்டவற்றை நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளமை காலகட்டத்திலேயே வாங்கி பயன் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக வங்கிகளில் லோன் அப்ளை செய்வார்கள். இது அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதுடன் பெரிய அளவிலான சுமையை கொடுப்பதில்லை.

அதற்கேற்றவாறு, வட்டி விகிதத்தைத் தேர்வு செய்து தான் கடன் பெற்றிருப்பார்கள். இந்நிலையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்து, வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.  அதன்படி, எம் சி எல் ஆர் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதம் ஐந்து அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள், குறைந்த வட்டியில் கடன் பெறலாம். இந்த வட்டி குறைப்பு அக்டோபர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் டெப்பாசிட்களுக்கான வட்டி குறைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |