கந்து வட்டி கேட்டு மிரட்டிய பைனான்சியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சக்திவேல் பைனான்சியரான சுந்தரராஜன் என்பவரிடம் நில பத்திரத்தை அடமானம் வைத்து 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
தற்போது சுந்தரராஜன் கந்து வட்டி கேட்டு நிலப்பத்திரத்தை தர மறுப்பதுடன், சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.