UPI செயலிகளான போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகளின் பயன்பாடு நாடு முழுதும் அதிகரித்து இருக்கிறது. இதில் பேடிஎம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட் பெய்ட் வசதியின் வாயிலாக கடன்களை வழங்குகிறது. உங்களது மொபைலில் Paytm செயலி இருந்தால்போதும், நீங்கள் உடனே பேடிஎம் போஸ்ட்பெய்ட் அம்சத்துக்கு விண்ணப்பித்து, அதன் வாயிலாக கடன் பெறமுடியும். உங்களிடன் பணம் இல்லையெனில், Paytm போஸ்ட் பெய்டிலிருந்து பணத்தை செலுத்தி, கிரெடிட் கார்டுகளுக்கு பணத்தை செலுத்துவது போன்றே, இந்த பில்லையும் செலுத்தினால் போதும். கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் முதலில் போஸ்ட்பெய்டில் உங்களை வாடிக்கையாளராக இணைத்துக்கொள்ள வேண்டும்.
பேடிஎம் போஸ்ட் பெய்டுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
# உங்களது மொபைலில் பேடிஎம் செயலியை திறக்க வேண்டும்.
# அதன்பின் முகப்புப் பக்கத்திலுள்ள போஸ்ட் பெய்டு ஐகானைத் தட்ட வேண்டும்.
# பான்கார்டு எண், பிறந்ததேதி மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகிய தேவையான விபரங்களை நிரப்ப வேண்டும்.
# கடன் அறிக்கையைப் பெற, உங்களது ஒப்புதலை வழங்க, தேர்வுப் பெட்டியைத் தட்ட வேண்டும்.
# தற்போது உங்களுக்கான சிறந்த சலுகைக்காக சில வினாடிகள் காத்திருக்க வேண்டும்.
# சலுகை ஒன்று உருவாக்கப்பட்டு கிரெடிட்,லோன் வரம்புடன் திரையில் தோன்றும்.
# KYC சரிபார்ப்பை முடிக்க செல்பி எடுக்கவேண்டும்.
# பின் உங்களது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
# பதிவுசெய்யப்பட்ட எண்ணில் நீங்கள் OTP பெறுவீர்கள்.
# கடைசியில் பேடிஎம் போஸ்ட் பெய்டைச் செயல்படுத்த உங்களது விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
# இந்த நடைமுறையின் படி நீங்கள் பேடிஎம் போஸ்ட் பெய்டை ஆக்டிவேட் செய்துவிட்டால், உடனடியாக உங்களுக்கு தேவையான கடனை பெற்றுக்கொள்ளலாம்.